கடந்த 5 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில’வினால் தாக்கல் செய்யப்பட மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 07 ஆம் திகதி பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.