இம்முறை பலமிக்க அணி மற்றும் இலங்கை அணி குறித்து அஷ்ரபுல் ஊடகங்களிடம் கருத்து…

இம்முறை ஆசியக் கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது சக்திமிக்க அணியாக உள்ளதாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் முஹமத் அஷ்ரபுல், பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகளுக்காக பயிற்சியின் போட்டியின் பின்னரான ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

“ஆசியக் கிண்ண போட்டிகளுக்காக பங்கேற்றும் அனைத்து அணிகளும் சக்திமிக்கவையே, எந்தவொரு அணிக்கும் எந்தவொரு அணியிணையும் தோற்கடிக்க முடியும்.. என்றாலும், நான் கூறுகிறேன் பாகிஸ்தான் அணியானது பலமிக்க அணியாகும். ஏனெனில் ஐக்கிய அரபு இராச்சியம் என்பது அவர்களது இடமாகும்.. அவர்கள் இதற்குக் கீழ் நெடுநாளாக விளையாடியுள்ளனர், ஆதலால் நாம் நினைக்கிறோம் பாகிஸ்தான் அணிக்கு அவ்விடம் மிகவும் பரீட்சயமானதென்று.., ஆதலால் அவர்கள் ஆசியக் கிண்ணத்தில் பலம் பொருந்திய அணியாக விளங்கும்”

மேலும், எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து அஷ்ரபுல் கருத்துத் தெரிவிக்கையில்;

“பங்களாதேஷ் அணிக்கு முதல் போட்டி மிகவும் முக்கியமானதாகவும், இலங்கையினை தோற்கடித்து வெற்றி பெறுவது எமக்கு இலாபம், அவ்வாறாயின் ஆப்கானிஸ்தான் அணியினை இலகுவாக தோற்கடித்து எமக்கு சிறந்ததொரு இடத்தினைக் கைப்பற்ற முடியும்”