அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று(13) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இம்மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.