முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

முல்லைத்தீவு – புதுக்குடியிறுப்பு – கொம்பாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(13) மாலை அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கருத்து முரண்பாடு காரணமாக வீட்டில் திடீர் என நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், வீட்டிலிருந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.