மஸ்கெலியா சமனளிய வித்தியாலயத்தைச் சேர்ந்த 28 மாணவர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில், இன்று(14) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் இடைவேளை நேரத்தில், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களே, இவ்வாறுக் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், தரம் 7 முதல் 9 வரையன வகுப்பு மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மறுஅறிவித்தல் வரும் வரை, பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.