ஜேவிபி இனது 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 17ம் திகதி வரையில் உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

20வது அரசியல் திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களும் இன்று(14) நீதியரசர்களான சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.