சில மாவட்டங்களுக்கு இன்று வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்…

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாக, குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள், அவதானமாக இருக்க வேண்டுமென, வானி​லை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

மேலும் நிலவும் வெப்பநிலையானது இன்றைய தினம் (15) அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.