ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது குடியியல் உரிமையை பறிக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்தது.
குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஜே.வி.பி’யினது பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவரும் வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டபோது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் பின்னர் மஹிந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது குடியியல் உரிமை பறிக்கப்படும் என்று கூறியதாக’ கூறினார்.
(riz)