தோல்விக்கான காரணம், எதிர்காலம் குறித்தும் இன்றைய(17) வெற்றி குறித்தும் திலான் கருத்து…

தோல்விக்கான காரணம், எதிர்காலம் குறித்தும் இன்றைய(17) வெற்றி குறித்தும் திலான் கருத்து…

கடந்த காலங்கள் இலங்கை அணியானது போட்டிகளை சிறந்த முறையில் கையாளவில்லை என இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

இன்று(17) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“நாம் போட்டியினை சிறப்பாக ஆரம்பிக்கவில்லை, கடந்த 07 மாத காலமாக விளையாடியதில் இது நன்காக புரிந்திருக்கும், பங்காளதேஷ் அணியுடனான இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்தோம், தென்னாபிரிக்கா உடனான முதல் ஒருநாள் போட்டியில்இலங்கை அணியானது முதல் 05 விக்கெட்களை இழந்து 30 ஓட்டங்களை குவித்திருந்தது, அவ்வாறே பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் 60 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்களை இழந்தது, ஆதலால் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் மன உளைச்சலில் இருக்கின்றார்கள், அவர்களது திறமைகளில் குறைவு இல்லை அவர்கள் தீர்மானங்கள் எடுக்கும் போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற, வீரர்கள் அவர்களது மன உளைச்சலை குறைத்துக் கொள்ள வேண்டும்..”