ஆசியக் கிண்ண தொடரில் இன்று(18) நடைபெறும் ஆட்டத்தில் ஹொங்கொங் மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கெடுக்கின்றன. தலா மூன்று அணிகள் வீதம் A,B என இரண்டு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒவ்வொரு முறை மோத வேண்டும்.
ஹொங்கொங் அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏற்கனவே தோல்வியடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இன்றைய(18) போட்டி ஹொங்கொங் அணிக்கு மிகவும் முக்கிய போட்டியாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.