இந்தியா – ரஷியா கூட்டு முயற்சியில் 2௦௦ ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு

அண்மையில் இந்தியா-ரஷியா இடையே ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன் இந்திய ராணுவத்துக்கு தேவையான 200 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும்.

அதாவது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா நமக்கு அளிக்கும் என  ரஷியாவுக்கான இந்திய தூதர் பி.எஸ்.ராகவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில்; ராணுவ ஒத்துழைப்பில் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று கூறுவது தவறான அல்லது அரைகுறையான தகவல் ஆகும். இத்துறையை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இன்னும் துடிப்புடன் உள்ளன. மற்ற நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் நமது படைகளுக்குத் தேவையான 70 சதவீத ஆயுதங்கள் ரஷியாவில் இருந்துதான் பெறப்படுகின்றன.

மேலும், ரஷியாவின் உதவியுடன் இந்தியா செயல்படுத்த இருக்கும் பல்வேறு திட்டங்கள் தற்போது விவாத அளவில் உள்ளன. அவை உறுதி செய்யப்பட்டவுடன் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

எனவும் தெரிவித்திருந்தார்.

(riz)