தனித்து களமிறங்கினாலும் ஆதரவு நல்லாட்சிக்கே – அனோமா

தனியாக போட்டியிட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணத்திற்கு வலுசேர்ப்போம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தரப்பினர் அதிகாரத்திற்கு வருவதனை தடுப்பதே எங்கள் கட்சியினதும் ஏனைய கட்சியினதும் ஒரே கருத்தாக உள்ளது.

நாங்கள் அந்த கருத்தின் ஊடாக வேறு பக்கத்தில் இருந்தில் அந்த இலக்கை அடைவோம்.

நாங்கள் இரண்டு பக்கத்தில் இருந்தும் தாக்குதல் மேற்கொள்வோம், எங்கள் இரண்டு பக்கங்களின் நோக்கமும் ஒன்று என்பதனால்… நான் நாட்டிற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் குடும்பத்திற்காக அல்ல.

இது எனது முதல் தடவையல்ல, எனது கணவரை சிறைப்படுத்திய சந்தர்ப்பத்திலும், எனது கணவர் விடுதலையாகுவதற்காக நான் எழுந்து நின்றேன்.

எனது இரண்டு பிள்ளைகளும் ஒரு போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை, இந்த பயணம் நாட்டின் எதிர்காலத்திற்கே தவிர எங்கள் குடும்பத்திற்காக அல்ல.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமருடன் தங்கள் கட்சி தலைமைத்துவதற்கிடையில் வலிமையான பிணைப்பு காணப்படுவதாகவும், நாட்டின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக கம்பஹா மாவட்ட வேட்பாளர் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)