2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்காக ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலம் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2019 – 2021 இடைக்கால வரவு செலவு திட்ட கட்டமைப்பின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டும் தற்போது உள்ள வளங்களை கவனத்தில் கொண்டும் இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.