பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதுள்ளதுடன் அவர்களை விடுதலை செய்ய இன்று(19) உத்தரவிட்டுள்ளது.
சிறைத் தண்டனை உத்தரவை நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதன்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று தனது இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் இலஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு முறையே 10 மற்றும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.