சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தான் எடுத்த தீர்மானம் தொடர்பில் தற்போது வருத்தப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் இதுகுறித்து தெரிவிக்கையில்;
“பிரச்சினையின் பின்னணி மிகவும் மோசமாகிக் கொண்டே செல்கின்றது,ஒருநாளும் நினைக்க்கவில்லை இவ்வளவு தூரம் பின்னடைவார்கள் என்று… இல்லை என்றால் இவ்வளவு அவசரமாக நான் ஓய்வினை அறிவித்திருக்க மாட்டேன். எனக்கும் பிரச்சினைகள் வரவே நான் ஓய்வினை அறிவித்திருந்தேன், இன்றேல் தான் 2019 உலகக் கிண்ணத்தில் விளையாடவே எண்ணியிருந்தேன்”
“நான் நினைக்கிறேன் வீரர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து உடனடியாக யாராவது முன்வந்து தீர்த்து வைக்கப்பட வேண்டும், இப்போதென்றால் எமது அரச தலைவர் குறுக்கிட்டு இதற்கு ஒரு சரியான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும், எமக்கு இன்னும் ஆறு மாத காலம் தான் உலகக் கிண்ண போட்டிக்கு உள்ளது, முன்னாள் அணியின் தலைவர் என்ற ரீதியில் கவலையடைகிறேன்”