ஜப்பானியர்களின் அழகிற்கான முக்கிய காரணங்களையும் அவர்கள் பயன்படுத்தும் அழகு இரகசியங்களையும் தெரிந்து கொள்வோம்.
முகத்தை மென்மையாக வைத்து கொள்ள ஜப்பானியர்கள் ஒரு சில அழகியல் முறையை பின்பற்றுகின்றனர். அதில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த அரிசி முக பூச்சுதான்.
தேவையானவை :-
அரிசி 1 கப்
குளிர்ந்த நீர் 2 கப்
செய்முறை :-
குளிர்ந்த நீரில் அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து அரிசியை தனியாக வைத்து கொள்ள வேண்டும். வடிக்கட்டிய நீரை மட்டும் சருமத்தில் பஞ்சை கொண்டு பூசி மசாஜ் செய்யவும். அடுத்து அந்த அரிசியை அரைத்து கொண்டு முகத்தில் தடவவும். இவ்வாறு செய்து வந்தால், பிறந்த குழந்தையை போல சருமம் மாறுமாம்.
முகத்தின் செல்களை புத்துணர்வூட்டி பொலிவு பெற செய்ய:
தேவையானவை :-
ஆர்கானிக் அரிசி 3 டீஸ்பூன்
அவகடோ பழ சாறு 2 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
செய்முறை :- முதலில் அரிசியை வேக வைத்து கொள்ள வேண்டும். அடுத்து இந்த அரிசியை மசித்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் அவகடோ பழ சாறு, தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகம் நீண்ட காலம் இளமையாக இருக்குமாம்
வெண்மையான முகத்திற்கு:
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி விட்டாலே முகம் வெண்மையாக மாறும். ஜப்பானியர்களின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த முக பூச்சு தான் காரணம். இந்த எளிய முறையை செய்ய…
தேவையானவை :-
கிரீன் டீ 1 கப்
தேன் 1 டீஸ்பூன்
அரிசி மாவு 1 ஸ்பூன்
செய்முறை :- முதலில் கிரீன் டீயில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொண்டு முகத்தில் பூசி கொள்ளவும். 15 நிமிடம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, வெண்மை பெறும்.
முகப்பருக்கள் அற்ற ஜப்பானியர்கள்:
தேவையானவை :-
ஆர்கானிக் அரிசி 3 ஸ்பூன்
பால் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
செய்முறை :- முகப்பருக்களை முற்றிலுமாக நீங்க முதலில் அரிசியை வேக வைத்து கொள்ள வேண்டும். பிறகு நீரை மட்டும் தனியாக வடித்து கொள்ள வேண்டும். அடுத்து, வேக வைத்த அரிசியை மசித்து கொண்டு, அவற்றுடன் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து நீரில் அலசினால் முகபருக்கள் காணாமல் போய்விடும்.