நடிப்புக்கு முழுக்குபோட்ட ஸ்ருதியின் அடுத்த திட்டம்…

கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தமிழில், ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 3, பூஜை, வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கமல் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அதன் படப்பிடிப்பு முதல் கட்டம் நடந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பிலிருக்கும் ஆர்வத்தைவிட இசை அமைப்பதிலும், பாடுவதிலும் அதிக ஆர்வம். பல படங்களில் அவர் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த பாப் பாடகர் மைக்கேல் கோர்சேலுடன் ஸ்ருதிக்கு காதல் மலர்ந்தது. அவருடன் டேட்டிங் ஈடுபட்டதுடன் மேற்கத்திய இசையில் அவருடன் இணைந்து பணியாற்றுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது லண்டனில் மைக்கேல் கோர்சேலுடன் இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்து அதற்கான ஒத்திகைகளும் பார்த்து வருகிறார். லண்டனில் ‘நியூ மியூசிக் மண்டே’ என்ற தலைப்பில் மேடையில் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தினார். அவரது மேற்கத்திய இசைக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

சர்வதேச அளவில் புகழ்பெறுவதற்கு மேற்கத்திய இசைப் பாடகியாக மாறுவதே சிறந்த வழி என தீர்மானித்திருக்கும் ஸ்ருதி புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. நடிப்புக்கு முழுக்குபோட்டு விட்டு காதலன் மைக்கேல் கோர்சேலுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முழுநேர மேற்கத்திய பாப் இசை பாடகியாக ஸ்ருதி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.