சருமத்தின் அழகை மேம்படுத்துவதற்கு முயற்சிப்பதை விட, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.
சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, சரும அழகை மேம்படுத்த உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் பார்க்கலாம்.
தயிர் மற்றும் ஆப்ரிகாட்:
ஆப்ரிகாட் பழம் மற்றும் தயிரை ஒன்றாக நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், இத்துடன் சிறிது தேனை சேர்த்துக் கொள்ளலாம்
கற்றாழை ஜூஸ்:
சருமத்தில் கருமையான புள்ளிகள் காணப்பட்டால், அப்பகுதியில் கற்றாழை ஜெல்லை தினமும் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சியின்றி ஈரப்பசையுடன் காணப்படும்.
கேரட் ஜூஸ்:
கேரட் ஜூஸை தினமும் முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நன்கு காண்பீர்கள்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஜூஸ்:
வெள்ளரிக்காயில் சரும கருமையைப் போக்கும் பண்புகள் உள்ளது. இந்த வெள்ளரிக்காய் ஜூஸை எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்துப் பயன்படுத்தினால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள், சிறிது கிளிசரினை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
பால், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு சிறிய பௌலில் சிறிது பால், 1 சிட்டிகை உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி, சருமம் பொலிவோடும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு பௌலில் சிறிது கடலை எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதனை தினமும் முகத்தில் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகள் சீக்கிரம் காணாமல் போகும்.