கிருலப்பனை பகுதியில் போக்குவரத்து மட்டு…

குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கபடுவதால், கிருலப்பனை, விஜய குமாரதுங்க மாவத்தையூடாக கொழும்பிற்கு பிரவேசிக்கும் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பொல்ஹேன்கொட சந்தியிலிருந்து பூர்வாராம வரையான பகுதியின் கொழும்பிற்கு பிரவேசிக்கும் பகுதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாக கிராண்ட்பாஸ், வின்சன்ட் பெரேரா மாவத்தையின் பபாபுல்லே சந்தியிலிருந்து ஆமர்வீதி வரையான பகுதியிலும், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.