ரூபாவின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து வாகன விலையை குறைந்தது 03 இலட்சம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்து கொண்டு செல்கின்ற காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.