2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன உத்தரவிட்டுள்ளதுடன், இவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியோமல் ரங்கஜீவ தாக்கல் செய்த பிணைக் கோரி தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவரை பிணையில் விடுதலை செய்துள்ளது