கைவிரல் நகங்களால் பருக்களைக் கிள்ளி விடும்போது, அது போகும் போது கருமையான மற்றும் அசிங்கமான தழும்பை விட்டுச் செல்லும். அதோடு, சரும செல்களும் மோசமாக பாதிக்கப்படும்.
இயற்கையும் நம் சரும பிரச்சனைகளைப் போக்க பல பொருட்களை கொடுத்துள்ளது.
பேக்கிங் சோடா:
ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகள் மீது தடவுங்கள். சில நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை என செய்து வந்தால், மிகவும் வேகமாக பருக்கள் விட்டு சென்ற தழும்புகள் மறைந்துவிடும்.
தேன்:
தேனை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தினால், பருக்களால் வந்த தழும்புகள் வேகமாக மறையும். அதற்கு முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இதனால் சருமத் துளைகள் விரிவடையும். பின் தேனை மெதுவாக பரு தழும்புகள் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். பின்பு ஐஸ் கட்டியைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத் துளைகள் மீண்டும் மூடிக் கொள்ளும்.
வேக வைத்த கேரட்:
நன்கு வேக வைத்த கேரட் உதவியாக இருக்கும். அதற்கு வேக வைத்த கேரட்டை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வையுங்கள். பின் முகத்தை பாலால் கழுவி, பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
வெள்ளரிக்காய்:
ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து நேரடியாக முகத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் வெள்ளரிக்காய் சாறு தழும்புகளைப் போக்க உதவுவதோடு, முகத்தின் புத்துணர்ச்சியும் மேம்படும். ஒருவர் முகத்தை வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு தினமும் ஒரு முறை கழுவி வந்தால், தழும்புகள் நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.
தக்காளி:
ஒரு தக்காளித் துண்டை, பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் 15-20 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் தவறாமல் செய்து வந்தால், தழும்புகள் காணாமல் போய்விடும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை கருமையான பரு தழும்புகளின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பருக்கள் மற்றும் அதன் தழும்புகள் நீங்கி, முகத்தின் பொலிவும் மேம்பட்டுக் காணப்படும்.
முட்டை வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து நன்கு அடித்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தழும்புகள் மறைவதோடு, சரும நிறமும் மேம்பட்டு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.