இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் குழாமில் மேத்யூஸ் நீக்கம்…

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்படவில்லை என நம்பகரமாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெரிவு செய்யப்பட இலங்கை கிரிக்கெட்டின் ஒருநாள் குழாம் அமைச்சரின் அனுமதிக்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் ஏஞ்சலோ மேத்யூஸ் இனது பெயர் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மேத்யூஸ் இனது உடற்தகுதி பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தில் இல்லாததால் அவரது உடற்தகுதியை உறுதி செய்யப்படும் வரையில் அணியில் இருந்து விலக்கப்படுவதாக தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.