சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…

உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், சுமார் 300 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஷ்யா முயன்ற போது, இந்த ஏவுகணைகளை எங்கள் நாட்டிற்கு எதிராக சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் அந்த முடிவை ரஷ்யா கைவிட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.