கண்டி, இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று(26) முதல் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக மத்திய மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய நிர்வாகிக்கான வெற்றிடத்திற்கு அதன் தலைவரால் தகுதியற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.