உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினை நீக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எஷ்லி டி சில்வாவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இனை எதிர்வரும் மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான குழாமில் இணைக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியக் கிண்ண போட்டிகளின் போது இலங்கை அணியானது படுதோல்விகளை சந்தித்ததன் பிற்பாடு தேர்வுக் குழுவானது ஏஞ்சலோ மேத்யூஸ் இனை தலைமைப் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும், அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்கவும் ஆசியக் கிண்ண போட்டிகளின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதே அமைச்சரின் நிலையாகும்.