அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனை பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுக் கொண்டவாறே அவுஸ்திரேலிய பொலிஸ் பிரிவின் உயர் மட்ட செயற்திட்டமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த கமர் நிசாம்தீன் என்பவர், ஐ.எஸ். அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச் செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கணினி, இணைய பாதுகாப்பு கற்கைகளில் தேர்ச்சி மிக்க இவர் அவுஸ்திரேலிய பொலிஸ் பிரிவில் கண்காணிப்பு, கணினி பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் உருவாக்குனராக பணியாற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.