ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து தினம் தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் இன்று(28) தீர்மானித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக காமினி செனரத் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.