முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 04 நாட்கள் கொண்ட தனிப்பட்ட சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளாரென ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு இலங்கையர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுப்பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் என பங்கேற்றுள்ளனர். இவர்கள் திரும்பவும் திங்கட்கிழமை (01) மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.