2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(28) இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுடையே இடம்பெறவுள்ளது.
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை 10 முறை மோதியுள்ளதில் 09 முறை இந்திய அணி வென்றுள்ள நிலையில், பங்களாதேஷ் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடரில் இதுவரை 6 தடவைகள் கிண்ணம் வென்றுள்ள இந்திய அணி, இந்த முறை 7 ஆவது தடவையாக கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் களமிறங்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.