மக்களின் ஆணையினை மீறினால் அரசியல் சுனாமியாக மாறும் – டலஸ்

1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் சம்பிரதாயபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவார்.

எவரேனும் மக்களின் ஆணைக்குப் புறம்பாக செயற்பட்டால் அரசியல் சுனாமியாக மாறும் என டலஸ் அழகப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

(riz)