சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் (ஐசிசி) அதன் சில விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கிரிக்கெட் வீரரின் ஒழுக்கம் தொடர்பில் புதிதாக 4 தவறுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அசாதாரண முறையில் மைதானத்திற்குள் நன்மை பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ளல் அல்லது விளையாட்டு வீரர் ஒருவருக்கு தனிப்பட்ட வகையில் அவமதிப்பு செய்வது இரண்டாவது மற்றும் மூன்றாவது மட்ட தவறாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்றாவது மட்ட தவறுக்கு வழங்கப்படும் 08 தண்டனைப் புள்ளிகள் 12 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, டெஸ்ட் போட்டிகள் 06 அல்லது 12 ஒருநாள் போட்டிகளுக்கு அது சமப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நடுவரின் ஆலோசனைக்கோ அல்லது தீர்ப்புக்கோ எதிராக செயற்பட்டால் முதலாம் மட்ட கடுமையான தவறாக அறிவிக்கப்பட்டுள்ளது.