பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தாதிமார்கள் நாளை(02) சுகயீன விடுமுறை..

பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அனைத்து தாதியர் குழுவும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க அனைத்து இலங்கை தாதிமார் சங்கம் தீர்மானித்துள்ளது.

2016 – 2017ம் ஆண்டுக்கான மேலதிக நேரம் கொடுக்கப்படாமை, தர ஊக்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தாமை, தாதியர்களுக்கான வெளிநாட்டு பயணங்களின் போது பெற்றுக் கொடுக்கப்படும் விசேட விடுமுறையானது 10 வருட கால சேவைக்காக இடைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்தே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.