இறால் பக்கோடா…

வெங்காயம், முந்திரி, சிக்கனில் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இறாலை வைத்து அருமையான பக்கோடா செய்வது எப்படி என்று பாக்கலாம்.

தேவையான பொருட்கள் :
இறால் – 200 கிராம்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
சோம்பு தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள் – கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பஜ்ஜி மாவு – 1 கப்
அரிசி மாவு – 3 ஸ்பூன்.

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.
வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி…