யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூன்று பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று(30) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்
நேற்று ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.