பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி, பாராளுமன்றுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவருமாயின் அரசில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ்மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்காது இருக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.