இன்று(02) அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இருந்து விசேட அறிவித்தல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(02) காலை 9.30 மணியளவில் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமானது காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும், அது குறித்து நேற்று(01) மாலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தினால் அனைத்து அமைச்சரவை அந்தஸ்து உள்ள உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை சந்திப்பில் நாட்டில் இடம்பெற்று வரும் இந்நாள் சர்ச்சைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவித்தல் ஒன்று முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தேசிய பாதுகாப்ப்பு, பொருளாதார மற்றும் கூட்டு அமைச்சரவையின் பொறுப்புக்களுக்கு அப்பால் அரச நடவடிக்கைகளை விமர்சித்தல் உள்ளிட்ட சில காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் குறித்த விசேட அறிவித்தலில் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.