மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையிலுமுள்ள கடற்பிராந்தியங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், கடற்படையினர் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடலலை உயரக்கூடும் எனவும் கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மசிறி திசேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளை(03) காலை 6 மணிவரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளூடாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.