பேலியகொட சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதி எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளை கையாளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய களனி பாலம் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்