கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் நேற்று(02) இரவு தடம்புரண்டுள்ளதாக ஹட்டன் புகையிர கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் மலையக புகையிரத சேவை பாதிக்கபடவில்லையெனவும், குறிப்பிட்ட நேரத்தினை விட காலதாமதம் நிலவுவதாகவும் ஹட்டன் புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தடம் புரண்ட புகையிரதத்தின் திருத்தப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களை பணியில் ஈடுபடுத்தி அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.