ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியூடாக ஹோமாகம பகுதியில் கடும் வாகன நெரிசல்…

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியூடாக ஹோமாகம அண்டிய பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோமாகம மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹோமாகம அண்டிய பிரதேசங்களில் மேல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட உள்ள தொழில்நுட்ப நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த இயக்கத்தினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.