இலங்கை அணியுடன் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிற்கு சுழற் பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் அல்லது ஜெக் லிச் ஆகியோரை சேர்த்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ஜோய் ரூட் இங்கிலாந்து ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சுக்கு நல்லதொரு கேள்வி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.