யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் 16 அலுவலர்களுக்கு இடமாற்றம்…

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் 16 அலுவலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தமது வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 24ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

முறைப்பாடு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளாமை தொடர்பிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடமாற்றம் வழங்கப்படடவர்களில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் அடங்குவதுடன், குறித்த முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸ் அலுவலர் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.