இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல், வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.