ஞானசார தேரரின் மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றம்…

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று(05) நிராகரித்துள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான, ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று(05) அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மனு மூன்று நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மை தீர்மானத்தின்படி நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.