குழியொன்றில் வீழ்ந்து இரண்டு ஆண் பிள்ளைகள் உயிரிழப்பு..

குருநாகல் – பொத்துஹெர – கட்டுபிட்டியவத்தை பிரதேசத்தில் குழியொன்றில் வீழ்ந்து இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு(05) இந்த சம்பவத்தில் 4 வயது 13 வயதான ஆண் பிள்ளைகள் இருவரே உயிரிழந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் தற்போது குருநாகல் பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன.