70 லட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் 05 பேர் கைது…

கிரேண்பாஸ் – மஹவத்தை பிரதேசத்தில் நேற்றிரவு(05) 70 லட்சம் பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர் என பொலிசார் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த 650 கிராம் ஹெரோயினும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.