தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டது..

களுத்துறை – மத்துகம வீதியில் வௌ்ளநீர் பெருக்கெடுத்துள்ள காரணத்தினால், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.