சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…

களுத்துறை, காலி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட, அகலவத்தை, மத்துகமை மற்றும் பதுரெலிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், பதுளை மாவட்டத்தின் பதுளை, பஸ்ஸர, ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கான உலருணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.