பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு இராணுவம் தயார் நிலையில்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (07) 200 இராணுவத்தினர், அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேலும் 1,200 படையினர் சீரற்ற வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 60 பேரும் காலி மாவட்டத்தில் 50 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 110 இராணுவத்தினரும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.